ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் |
நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இரங்கல் தெரவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.
ரஜினி தன் டுவிட்டரில், ஸ்ரீதேவியின் மரணம் எனக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனது உண்மையான நண்பரையும் திரையுலகம் நல்ல நடிகையையும இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
கமல் தன் டுவிட்டரில், ‛‛அவரது இளமை காலம் முதல் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்கான இடத்தை அடைய அவர் கடுமையாக உழைத்தார். அவருடன் நடித்த மகிழ்ச்சிகரமான நாட்களை சோகத்துடன் நினைவு கூர்கிறேன். மூன்றாம் பிறை படத்தில் அவர் நடித்த தாலாட்டுப் பாடல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது என கூறியுள்ளார்.