அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி |
நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருந்தவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் நட்புனா என்னானு தெரியுமா. சின்னத்திரை நடிகர் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூரலிகான் நடித்துள்ள இந்தப் படத்தை லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கி இருக்கிறார். தரண் இசை அமைத்திருக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசியதாவது:
சினிமாவில் நல்ல நட்பு கிடைப்பது அபூர்வமானது. கூடவே இருப்பார்கள், குழி தோண்டுவார்கள். ஆனாலும் நட்பு அபூர்வமானது, ஆழமானது. அப்பா மகன், அண்ணன், தம்பி இப்படி எல்லா உறவிலும் இருப்பது நட்பு தான். எல்லா உறவிலும் சில விதிமுறைகள், எல்லைகள் இருக்கும், ஆனால் நட்பில் எதுவும் கிடையாது எல்லையற்றது.
எனது படம் சவரக்கத்தி வெற்றிப் படமல்ல. ஆனால் மீடியாக்கள் கொண்டாடினார்கள். பாராட்டினார்கள், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சவரக்கத்தி படத்தை லட்சக் கணக்கான பேர் நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்திருக்கிறார்கள். அது தவறு என்று சொல்ல மாட்டேன், அசிங்கம் என்பேன். இழிவான செயல் என்பேன். ஆயிரம் பேரின் உழைப்பை. ஒரு தயாரிப்பாளரின் பல வருட சேமிப்பை சில நொடிகளில் திருடுகிறீர்கள்.
திருட்டுத்தமாக டவுன் லோட் செய்து படம் பார்ப்பது, தந்தையின் கண் முன் மகளை நிர்வாணபடுத்தி பார்ப்பதற்கு சமம். தயவு செய்து அந்த இழிசெயலை செய்யாதீர்கள். கடவுளுக்கு பிறகு திரையைத்தான் அன்னாந்து பார்க்கிறீர்கள். தியேட்டர் ஒரு கோவில், ஒரு தேவாலாயம், ஒரு மசூதி என்று நினையுங்கள். என்றார்.
விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திசேகர், கரு.பழனியப்பன், மோகன்ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.