இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல இணையதள டிவியான யப், பல்வேறு விதமான பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. அந்தவகையில் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, இந்தியா - இலங்கை - வங்க தேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டுவென்ட்டி-20 போட்டியான ஹீரோ நிதாஸ் கோப்பை 2018-யை நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய உள்ளது.
இலங்கையில் நடக்கும் இந்த போட்டி, மார்ச் 6 முதல் 18-ம் தேதி வரை நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும், இதில் முன்னணி பெறும் இரண்டு அணிகள், இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.
இந்த தொடர் முழுமையையும் யப் டிவி, நேரடியாக ஒளிப்பரப்புகிறது. போட்டிகளை www.yupptv.com, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணலாம்.
யப் டிவியில் 14 மொழிகளில் 300க்கும் அதிகமான சேனல்கள், 5000க்கும் அதிகமான படங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளை காண முடியும்.