ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
என்னை போட்டியிட விடாமல் வீழ்த்த நினைப்பவர்களின் சூழ்ச்சியை சரிகட்டுவேன், என நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கூறினார்.
காரைக்குடியில் இசை நாடக சங்க ஆண்டு விழா மற்றும் சங்கரதாஸ் சுவாமி குருபூஜை விழா கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது: நடிகர் சங்கத்தில் எங்கள் செயல்பாடு வெளிப்படையாக உள்ளது. வரும் நடிகர் சங்க தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
டிஜிட்டல் விநியோக நிறுவனம் ஹாலிவுட், ஹிந்தி படத்துக்கு ஒரு பிரின்டுக்கு ரூ.10 ஆயிரம் பெறும் நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களுக்கு ரூ.22 ஆயிரம் கூடுதலாக கேட்கின்றனர். தயாரிப்பாளருக்கு ரூ.50 லட்சம் முதல் 90 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. டிஜிட்டல் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. வருகிற 16-ம் தேதி அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு எந்த படமும் ரிலீஸ் செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.
தியேட்டர்களில் இடைவேளைகளில் அடுத்த படங்களின் டிரைலர் வெளியிடாமல், கமர்ஷியல் விளம்பரம் வெளியிடப்படுவது கண்டனத்துக்குரியது. நடிகர்கள் நாடாள வரக்கூடாது என கூறும் திராவிட கட்சியிலேயே நடிகர்கள் உள்ளனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வரலாம். ரஜினி, கமல் அரசியல் குறித்து காலம் தான் பதில் சொல்லும்.
ஆர்.கே.நகர் போன்று மறுபடியும் ஒரு தேர்தல் வரும். அதில் என்னை வீழ்த்த நினைப்பவர்களின் சூழ்ச்சியை சரி கட்டுவேன். காதல் திருமணமா என்பது குறித்து தற்போது எதுவும் தெரியாது, என்றார்.
சின்னத்திரை இயக்குனர் திருமுருகன், நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், நடிகர் ரமணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.