ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
2003ல் ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா நடித்த படம் சாமி. சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஹீரோயினாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த நிலையில், திடீரென்று இப்படத்திலிருந்து விலகினார் த்ரிஷா. த்ரிஷா நடிக்க மறுப்பதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ்தான் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
அதாவது, த்ரிஷாவின் கேரக்டருக்கு குறைவான காட்சிகள் கொடுத்து எனக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன். இல்லையேல் படத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று கீர்த்தி சுரேஷ் பிடிவாதம் செய்தாராம். அதன்காரணமாகவே முதலில் த்ரிஷாவுக்கு அதிக காட்சிகள் வைத்திருந்த டைரக்டர் ஹரி, பின்னர் அவருக்கான கேரக்டரின் காட்சிகளை குறைத்து விட்டாராம். அதனால் தான் த்ரிஷா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷைக் கேட்டால் மறுக்கிறார். அதோடு, சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷா நடிக்காததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது கேரக்டர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று அடித்து சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.