‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மகேஷ் பாபுவின் திரையுலக வரலாற்றில் அவர் இப்படி ஒரு தோல்வியை இதற்கு முன் சந்தித்திருக்கவே மாட்டார் என்று சொல்லக் கூடிய படமாக அவர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'ஸ்பைடர்' படம் அமைந்தது.
தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாரான 'ஸ்பைடர்' படம் வெளிவந்து படுதோல்வியைச் சந்தித்தது. தமிழில் முதல் முறையாக நேரடிப் படத்தில் நடித்த மகேஷ் பாபு இனி தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிக்க வராத அளவிற்கு படத்தின் தோல்வி அமைந்தது. படத்தின் நஷ்டத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் இன்னும் மீளவில்லை.
இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பானது. டிவியில் கூட இந்தப் படத்தைப் பார்க்க பெரும்பாலான தெலுங்கு டிவி நேயர்கள் தயாராக இல்லை என்பது தற்போது வெளிவந்துள்ள 'ரேட்டிங்'கை வைத்து தெரிய வந்துள்ளது.
சங்கராந்தி பண்டிகையில் முன்னிட்டு தெலுங்கு முன்னணி டிவிக்களில் ஒளிபரப்பான புத்தம் புதுப் படங்களில் ரவி தேஜா நடித்த 'ராஜா தி கிரேட்' படமும், ஜுனியர் என்டிஆர் நடித்த 'ஜெய் லவகுசா' படமும் 17.7 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளன. சர்வானந்த் நடித்த 'மகானுபாவடு' படம் 8.3 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. நாகார்ஜுனா தயாரிப்பில் ஸ்ரீகாந்த் மகன் ரோஷன் நடித்து வெளிவந்த 'நிர்மலா கான்வென்ட்' படம் 8.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. புதுமுக நடிகர் நடித்த இந்தப் படத்தை விடக் குறைவாக 6.7 புள்ளிகளை மட்டுமே பெற்று 'ஸ்பைடர்' படம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தோல்விப் படத்தைக் கொடுத்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார். மகேஷ் பாபு அடுத்து 'பாரத் அனி நேனு' படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.