அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் படம் பக்கா. சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள்ரவி, சிங்கமுத்து, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், சத்யா இசை அமைத்துள்ளார். டி.சிவகுமார் தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இண்டோரில் (உட்புறம்) படம்பிடிக்காமல் அனைத்து காட்சிகளும் அவுட்டோரில் (வெளிப்புறம் திறந்த வெளியில்) படமாக்கப்பட்டுள்ள படமாக வளர்ந்துள்ளது என்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம். இன்டீரியர் காட்சிகள் இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியர் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா.
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.