ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகர் ஜீவா நடித்துள்ள 'கலகலப்பு 2, கீ' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில், பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்த் திரையுலகில் ஒரே நாளில் ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் வெளிவருவதை கடந்த பல வருடங்களாகவே தவிர்த்து வந்தனர். குறைந்த பட்சம் ஒரு சில வார இடைவெளியில்தான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள். அப்படியிருக்க இப்போது ஜீவா நடிக்கும் படங்கள் எப்படி ஒரே நாளில் வர உள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'கலகலப்பு 2' படமும், அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'கீ' படமும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'கீ' படத்திற்காக அவருடைய 'இரும்புத் திரை' படத்தைத் தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவித்தார். அப்படியிருக்க 'கலகலப்பு 2' படத்தை அதே தேதியில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இப்போது இரண்டு படங்களும் அதே நாளில் வருமா அல்லது ஒரு படம் தள்ளிப் போகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.