7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

முதன் முதலாக மெகா ஸ்டார் மம்மூட்டி நேரடி தமிழ் படத்தை தயாரித்து நடிக்கும் "ஸ்ட்ரீட் லைட்ஸ்". கதைக்கு ஏற்றார்போல் தன்னை தயார்படுத்தி, தன்னை கதாப்பாத்திரமாகவே உருமாற்றி, எதார்த்தத்தின் உச்சமாய் தன் நடிப்பின் மூலம் அனைவரும் கவரும் நடிகர் மெகாஸ்டார் மம்மூட்டி.
மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாய் திகழும் இவருக்குத் தமிழிலும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். பல மலையாள படங்களை தயாரித்துள்ள நடிகர் மம்மூட்டி, முதன் முதலாக ஒரு நேரடி தமிழ் படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்து நடித்துள்ளார். "ஸ்ட்ரீட் லைட்ஸ்" எனப் பெயரிடப்பட்ட இப்படம் இன்வஸ்டிகேடிவ் திரில்லர் (Investigative Thriller) வகையைச் சார்ந்த படமாக உருவான இப்படத்தில் விறுவிறு திரைக்கதையும், கலகல நகைச்சுவையும் கலந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
விஸ்வருபம் 2 மற்றும் உத்தம வில்லன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தின் தேசிய விருது பெற்ற 3 நடிகர்கள் மம்மூட்டி, "மாஸ்டர்" ஆதிஷ், "பசங்க" ஸ்ரீராம் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்டன்ட் சில்வா, பிளாக் பாண்டி, பிர்த்திவிராஜ், பாண்டியராஜன், மொட்ட ராஜேந்திரன், காயத்ரி, லிஜோ மோல், மனோ பாலா, "கபாலி" சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
"ஸ்ட்ரீட் லைட்ஸ்" படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடி படமாக தயாராகிறது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு - ப்லே ஹவுஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம், ஒளிப்பதிவு - ஷாம்தத் சைனுதீன்
கதை, திரைக்கதை - ஃபவாஸ் முகமது
வசனம் - ஷாம்தத் சைனுதீன், ஃபவாஸ் முகமது
இசை - ஆதர்ஷ் ஆபிரஹாம்
படத்தொகுப்பு - மனோஜ்
கலை இயக்குநர் - சாபு ராம்