என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் படம் - 'கஜினிகாந்த்'. இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி ஹாட்ரிக் அடித்த பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக, வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டுமொத்தமாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இம்மாதம் 30ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே வெளிவந்த 'கஜினிகாந்த்' படத்தின் டீஸரைத் தொடர்ந்து நேற்று சிங்கிள் டிராக்கை ரிலீஸ் செய்தனர். கஜினிகாந்த் படத்தை உலகமெங்கும் மார்ச் 30-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் ஞானவேல் ராஜா. இந்தப்படம் 'பலே பலே மகாடிவோய்' என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பது உபதகவல்.