‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மதராசப்பட்டினம் படத்தில் லண்டன் நடிகை எமிஜாக்சனை அறிமுகம் செய்த ஏ.எல்.விஜய், வனமகன் படத்தில் பாலிவுட் நடிகை சாயிஷாவை தமிழில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு தற்போது ஆர்யா நடித்துள்ள கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார் சாயிஷா.
இந்த படத்தில் சாயிஷாவுடன் நடித்தது பற்றி ஆர்யா கூறுகையில், வனமகன் படத்தில் சாயிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதேசமயம் அதிரடியாக நடனமாடியிருந்தார். அதனால் இந்த படத்தில் அவருடன் பாடலுக்கு நடனமாட வேண்டுமே என்று பயந்து கொண்டிருந்தேன்.
நானும், சாயிஷாவும் நடனமாடிய பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டது. ஒருவழியாக கஷ்டப்பட்டு ஆடினேன். பின்னர் சென்னை வந்து அந்த பாடலை எடிட்டிங் செய்தபோது சாயிஷா பயங்கரமாக நடனமாடியிருக்கிறார். நீங்கள் பக்கத்தில் சும்மா நிற்கிறீர்கள் என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு இந்த படத்திலும் பிரமாதமாக நடனமாடியிருக்கிறார் சாயிஷா என்கிறார் ஆர்யா.
மேலும் அவர் கூறும்போது, தமிழே தெரியாது என்றபோதும், தமிழ் டயலாக்குகளை மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பார் என்றார்.