‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் சந்தர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில் விக்ரம், தமன்னா மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஸ்கெட்ச்'. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, சீனு, படத்தை வெளியிட்ட எஸ்.தாணு, இயக்குனர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன், விக்ரம், ஸ்ரீமன், வினோத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக படத்தை வெளியிட்ட எஸ்.தாணு தெரிவித்தார். படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.
'ஸ்கெட்ச்' படம் பற்றி வந்த பல விமர்சனங்களிலும் படத்தில் சூரி வந்துவிட்டு காணாமல் போய்விடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அது பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், அதற்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு சூரியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
சூரி இந்தப் படத்துல சில சீன்ஸ்ல வந்துட்டுப் போவாரு, அதுக்குக் காரணம் நான் தான். அவர் நிறைய சீன்ல இருந்தாரு, சில இடத்துல ஒட்டலை, அதனால, சில சீன்களை தூக்க வேண்டியதா இருந்துச்சி. அதுக்கு முழு பொறுப்பு நான் எடுத்துக்கறேன் சூரி.
அடுத்த படத்துல நீங்க ஹீரோவா பண்ணுங்க, நான் காமெடியனா பண்றேன். இல்லை இரண்டு பேருமே சேர்ந்து பண்ணலாம். நாம கண்டிப்பா பண்ணுவோம். சூரி, மரியாதைக்குரிய நேர்மையான ஒரு நடிகர். அவர் வருவதும் போவதும் தெரியாது. படத்துல அவருடைய காட்சிகள் கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கரா இருந்துச்சி, அதை அவர் கிட்டயே சொன்னோம், சரி தூக்கிடுங்க பரவாயில்லைன்னு சொன்னாரு, அதுக்கு முழு காரணம் நான் தான், மன்னிச்சிக்குங்க சூரி,” என மேடையில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் விக்ரம்.
தமிழ் சினிமாவில் இதுவரை தூக்கிய காட்சிகளுக்காக சம்பந்தப்பட்ட நடிகரிடம் யாரும் இப்படி மன்னிப்பு கேட்டதாக வரலாறு இல்லை.