'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
மலையாளத்தில், மம்மூட்டி - நயன்தாரா நடிப்பில் வெளியான, பாஸ்கர் தி ராஸ்கல் படம், பெரும் வெற்றி பெற்றது. இந்த படம், தமிழில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில், 'ரீ மேக்' ஆகியுள்ளது. இதில் நடிப்பதற்காக, முதலில், அஜித்தை அணுகினார், இயக்குனர் சித்திக்.
அஜித்தின், 'கால்ஷீட்' கிடைக்கவில்லை. இதையடுத்து, ரஜினியை அணுக நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. கடைசியாக அரவிந்த் சாமியை வைத்து, இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார்.
நயன்தாரா வேடத்தில் நடிப்பதற்காக, அவரையே அணுகினார், இயக்குனர். அவர் மறுத்து விடவே, சோனாக் ஷி சின்காவிடம் பேசிப் பார்த்தனர். அந்த ஆசையும் கைகூடவில்லை. இதனால், அமலாபால், அரவிந்த் சாமிக்கு ஜோடியாகி விட்டார்.
பட அனுபவம் குறித்து அமலா பால் கூறுகையில், 'அரவிந்த் சாமியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறி விட்டது. சினிமாவுக்கு உள்ளேயும் சரி; வெளியிலும் சரி; மிகச் சிறந்த மனிதர் அரவிந்த் சாமி தான்' என, அவரது புகழ் பாடினார்.