ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தவர் கேத்ரின் தெரசா. தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன் என சில படங்களில் நடித்தவர், தற்போது சுந்தர்.சியின் கலகலப்பு-2 படத்திலும் நடித்திருக்கிறார். இதேப்போல் தெலுங்கிலும் கெளதம் நந்தா, நேனே ராஜூ நேனே மந்திரி ஆகிய படங்களில் நடித்தார் கேத்ரின் தெரசா.
இந்நிலையில், தற்போது தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கணிதன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் அப்படத்தை இயக்கிய சந்தோஷ், தெலுங்கிலும் இயக்குகிறார். நிகில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் அந்த படத்திலும் நாயகியாக கேத்ரின் தெரசாவே நடிக்கிறார். கணிதன் படத்தின் தெலுங்கு பதிப்பில் அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.