‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் ஏற்கெனவே 'அரிமா நம்பி' படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம்பிரபு நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக விக்ரம் பிரபு இன்னொரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்கு 'துப்பாக்கி முனை' என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார்.
'துப்பாக்கி முனை' படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா இணைந்துள்ளார். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாதநிலையில் மார்க்கெட் இல்லாத விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாகிறார்.
கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் தவிர விக்ரம் பிரபு நடித்து வரும் மற்றொரு படம் 'பக்கா'. இந்த படம் விரைவில் வெளியாகிறது.