ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
ரஜினி அரசியலுக்கு வர இருக்கிறார். விரைவில் தனி கட்சி, கொடி, சின்னம் கொள்கை அறிவிக்க இருக்கிறார் இந்த நிலையில் ரஜினிக்கு 360 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக பின்-ஆப் தெரிவித்துள்ளது. பின்-ஆப் என்பது பிரபலங்களின் சொத்து மதிப்பை கண்காணித்து வெளியிடும் ஒரு இணையதள ஆண்ட்ராய்டு ஆப். இந்த தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
ரஜினிக்கு 360 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது. இது அவரின் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகளின் அடிப்படையிலானது. சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி. முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்ற 3 ஆடம்பர கார்கள் ரஜினியிடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி. ரஜினி சென்னை போயஸ் தோட்ட வீட்டை 2002-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடி.
ரஜினிக்கு 2012-ம் ஆண்டு 49 கோடியும், 2013ம் ஆண்டு 60 கோடியும், 2014ம் ஆண்டு 35 கோடியும், 2015ம் ஆண்டு 58 கோடியும், 2016ம் ஆண்டு 65 கோடியும் வருமானம் வந்துள்ளது. ரஜினி ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். என்று அந்த அமைப்பின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.