‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மிலாப் ஜவேரி இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், "ராஹ்" என்ற படம் உருவாக உள்ளது. ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் ஜோடியாக நடிக்க முதலில் தமன்னாவை கேட்டனர். அவர் மறுத்துவிட, நடிகை பூஜா ஹெட்டேவை அணுகினர். ஆனால், அவரும் மறுத்துவிட்டார். மிலாப் ஜவேரி, பூஜாவை சந்தித்து, இப்படம் தொடர்பாக இரண்டு - மூன்று முறை பேசியிருக்கிறார். ஆனால் அவர், நடிக்க முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதனால் வேறு ஒரு நடிகையை நடிக்க படக்குழு முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். பூஜா நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. ராஹ் படத்தை நிகில் அத்வானி தயாரிக்கிறார்.