இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
சங்கமித்ரா படத்தில் கமிட்டாகி பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் ஸ்ருதிஹாசன். ஆனால் அதையடுத்து அவருக்கு புதிய படங்கள் எதுவுமே புக்காகவில்லை. தனது தந்தை கமல் இயக்கி நடித்து வரும் சபாஷ்நாயுடு படத்தில் மட்டுமே நடிக்கிறார்.
இதனிடையே, தனது லண்டன் காதலரான மைக்கேல் கோர்சலுடன் சமீபகாலமாக அவர் அதிகம் பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சியின்போது மைக்கேல் உடன் ஆஜரான ஸ்ருதிஹாசன், அப்போது தனது தந்தையான கமல்ஹாசனுக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் லண்டன் சென்ற ஸ்ருதி, அங்கு காதலருடன் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். அப்போது மைக்கேல் கோர்சலுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.