இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
ஒரே நாளில் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவரும் மோதிக் கொள்கிறார்களே என திரையுலகத்தினரும், சினிமா ரசிகர்களும் பேசினார்கள். அந்த மோதலில் சிவகார்த்திகேயன் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முந்திக் கொண்டிருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.
'வேலைக்காரன்' படம் அதிக கருத்துள்ள படமாக இருப்பதாகப் படம் பார்த்த பலரும் தெரிவிக்கிறார்கள். பெரிய ஹீரோக்கள் போல சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கருத்து சொல்லியுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'வேலைக்காரன்' வெளியான அடுத்த மூன்று நாட்களும் விடுமுறை தினங்களாக அமைந்ததால் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறதாம்.
அதேசமயம், சந்தானம் நடித்து வெளிவந்துள்ள 'சக்க போடு போடு ராஜா' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கடும் சிக்கலைச் சந்தித்துள்ளது. முதல் முறையாக நேரடியாக மோதலில் ஏற்பட்ட சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகிய இருவரின் மோதலில் சிவகார்த்திகேயன் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.