‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கும் படம் கடமான்பாறை. இந்தப் படத்தில் அவர் தனது மகன் அலிகான் துக்ளக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு ஜோடியாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரவிவர்மா இசை அமைக்கிறார், டி.மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது:
காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக் கதை. காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை. பொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் அதுதான் கதை .
படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம். பக்கா கமர்ஷியல், காமெடி படமாக “ கடமான் பாறை “ உருவாகி உள்ளது என்றார் மன்சூரலிகான். மகனுடன் இரு ஹீரோயின்களும் கவர்ச்சியாக இருக்கும் படங்களை வெளியிட்டுள்ளார் மன்சூரலிகான்.