ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். வட சென்னை கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சூரி காமெடியனாக நடித்திருக்கிறார். ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.
கடந்த பத்து நாட்களாக இந்த படத்திற்காக டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம். வடசென்னை தமிழ் கலந்து பேசியிருக்கும் அவர், சில காட்சிகளில் தனது குரலை சற்று வித்தியாசப்படுத்தியும் பேசியிருக்கிறாராம். அதனால்தான் மற்ற படங்களை விட இந்த படத்திற்கு அதிகப்படியாக சில நாட்களை டப்பிங் பேச எடுத்துக்கொண்டாராம் விக்ரம்.