‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு படத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக வெளியிட்டால்தான் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தோற்றத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கும். இதுவே அந்தப் படம் இரண்டு மூன்று வருடங்களாகத் தயாரிப்பில் இருந்தால் அவர்களது தோற்றத்தில் காட்சிக்குக் காட்சி மாற்றங்கள் தெரியும். அது படம் பார்க்கும் ரசிகனை படத்துடன் ஒன்ற விடாது.
கௌதம் மேனன் இயக்க தனுஷ் நாயகனாக நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை கடந்த வருடத் துவக்கத்திலேயே ஆரம்பித்தார்கள். அதன் பின் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, கௌதம், 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடிக்கப் போய்விட்டார். அந்தப் படத்தை வெளியிட்ட பின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டீசரை கடந்த வருடம் டிசம்பரில் வெளியிட்டார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் என்ற சஸ்பென்சை வைத்து சமீபத்தில்தான் டர்புகா சிவா இசையமைக்கிறார் என அறிவித்தார்கள். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இந்த வருடத்திலேயே வந்து விடும் என்று தனுஷ் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு நடத்தாமல் படத்தை எப்படி வெளியிட முடியும். அடுத்த மாதம் அதை ஆரம்பிக்க உள்ளார்களாம். இந்தப் படத்தை முடிக்காமலே கௌதம் வழக்கம் போல, வேறு படத்தை இயக்கப் போய்விட்டார். விக்ரம் நாயகனாக நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார்.
நட்சத்திரத்திற்கு முன்பாகவே தோட்டாவைப் பாய வைக்க வேண்டுமென்று இப்போது முடிவெடுத்துள்ளாராம். எப்படியும் அடுத்த வருடத் துவக்கத்தில் தோட்டா கண்டிப்பாகப் பாய்ந்துவிடும் என்கிறார்கள்.