‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் முடிவடைந்து விட்டதாக சொல்லப்பட்டபோதும், படம் எப்போது வெளியாகிறது என்கிற தகவல்கள் இல்லை.
இதுதவிர ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டு தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ். இந்த படத்தை அடுத்து பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதாவது, மாரி-2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம், மேயாத மான் ரத்ன குமார் இயக்கும் படம் என நான்கு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த வகையில், தற்போது தனுஷின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.