ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
மலையாள நடிகர்களான நிவின் பாலி, துல்கர் சல்மான் இருவருக்கும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக வேண்டும் என்று கொள்ளை ஆசை. அதன் காரணமாக இவர்கள் மலையாளத்தில் நடிக்கும் படங்களை எல்லாம் நேரடித் தமிழ்ப்படம் போல் தமிழ்நாட்டில் மார்க்கெட்டிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாளப் படமான நேரம்' நேரடி தமிழ்ப்படத்தைப்போல் இங்கே வெளியானது. இதே பாணியில் துல்கர் சல்மான் நடித்த சோலோ என்ற மலையாளப்படத்தை நேரடி தமிழ்ப்படமாக வெளியிட்டனர். ஆனால் இங்கே வேலைக்கு ஆகவில்லை.
இந்நிலையில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஸ்ரதா ஸ்ரீநாத் என தமிழுக்கு அறிமுகமான முகங்களும் நடித்திருக்கிறாகள்.
இப்படம் கன்னடத்தில் வெளியான 'உளிடவரு கண்டண்டே' என்ற படத்தின் ரீ-மேக். அஜனீஷ் லோகநாத் இசை அமைத்துள்ள 'ரிச்சி' டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.