ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் தமிழுக்கு வந்தவர் டாப்சி. ஆனால் அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்தபோதும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் டாப்சி, ஹிந்தி படங்களில் கிளாமராக நடிப்பதை அடுத்து தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது டாப்சி வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்களைப்பார்த்த சில ரசிகர்கள், அதை விமர்சிப்பதோடு, இப்படியெல்லாம் துக்கடா டிரஸ் அணிவதினால் தான் பெண்களை ஆண்கள் தவறாக பார்க்கிறார்கள். பணத்திற்காகத்தானே இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறீர்கள் என்று அவரை வெறுப்பேற்றும் கேள்விகளை கேட்டு டென்சன் செய்து வருகிறார்கள். அதற்கு டாப்சியோ, நீங்கள் ஏன் தவறாக பார்க்கிறீர்கள். முதலில் உங்களது பார்வையை மாற்றுங்கள் என்று பதிலடி கொடுத்து தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.