ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஆங்கில சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகை ஆனவர் லேகா வாஷிங்டன். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இதுதவிர பல இசை ஆல்பங்களிலும் பாடி ஆடியுள்ளார்.
லேகா வாஷிங்டனும் மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் லிங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள். இப்போது முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
வருகிற 18ந் தேதி மும்பையில் உள்ள அலிபாக்கில் எளிய முறையில் லேகா, பப்லோ சட்டர்ஜி திருமணம் நடக்க இருக்கிறது. அன்றைய தினமே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. லேகா கிறிஸ்தவ மத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் இரு மதத்தின் சடங்குபடி திருணம் நடக்கவில்லை. பொதுவான முறையில் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் மோதிரம் மாற்றுதல், தாலி அணிவித்தல் போன்ற நிகழ்ச்சி எதுவும் இருக்காது.