போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
திரைப்படங்களில் நடிக்கும் போது கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் தான் தங்களை அதிகம் மாற்றிக் கொள்வார்கள். ஆனால், 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக நிஜமாகவே தனது தோற்றத்தைக் குண்டாக மாற்றினார் நடிகை அனுஷ்கா. அதன் பின் அவரால் அந்த குண்டான தோற்றத்திலிருந்து சீக்கிரமாக ஒல்லியான தோற்றத்திற்கு மாற முடியவில்லை.
'பாகுபலி 2' படத்தில் கூட அந்த குண்டான தோற்றத்தில்தான் நடித்து முடித்தார். படம் முடிந்த பின் அனுஷ்காவின் தோற்றத்தை சில கோடிகள் செலவு செய்து ஒல்லியாக, ஸ்லிம் ஆனவராகக் காட்டினார்கள். படத்தின் பல கோடி பட்ஜெட்டில் அதற்கும் சில கோடி செலவானது.
இப்போது, மீண்டும் 'பாக்மதி' படத்திற்காக அனுஷ்காவை அதே போல மாற்றியுள்ளார்கள் என்ற தகவல் பரபரப்பாகியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு 'பாக்மதி' முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் அனுஷ்கா மிகவும் ஒல்லியாக இருந்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 'பாகுபலி 2' படத்தில் உள்ளதை விடவும் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறது. ஆனால், அவர் இப்போது பழையபடி ஒல்லியாக மாறிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அனுஷ்கா அடுத்த முறை நேரில் வரும் போதுதான் அது பற்றிய சர்ச்சை முடிவுக்கு வரும். எப்படியிருந்தாலும் அனுஷ்காவை அழகுபடுத்த சில தயாரிப்பாளர்கள் கிராபிக்ஸுக்காக சில கோடிகளை செலவு செய்யத் தயாராக இருக்கும் போது அவருக்கு ஏன் கவலை?.