‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'மற்ற ஹீரோக்கள் எல்லாம், 'பஞ்ச்' டயலாக் பேசும்போது, நான் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா' என, கேட்கிறாராம், விக்ரம். அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஸ்கெட்ச் படத்தில், பல பஞ்ச் டயலாக்குகளை அவர் பேசியுள்ளாராம்.
'ஸ்கெட்ச், ஸ்கெட்ச் போட்டா, எதுவுமே மிஸ் ஆகாது' என்பது போன்ற அனல் பறக்கும் வசனங்களை அவர் பேசியுள்ளாராம். படத்தின் டீசரில், இதுபோன்ற வசனங்கள் இருப்பதை பார்த்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஸ்கெட்ச் படத்துக்காக, விக்ரம் பேசிய வசனங்கள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சற்று இடைவெளிக்கு பின், தமன்னா, மீண்டும் இந்த படத்தின் மூலம் தமிழில் தலைகாட்டுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.