ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
சுசீந்திரன் இயக்கத்தில், சந்தீப், மெஹ்ரின், விதார்த், ஹரிஷ் உத்தமன் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால். டி.இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. டீசரை வெளியிட்டு விஷால் பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன்.
தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் பிளாட்பார்மில் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும். அதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும். சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம்.
துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதே போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார் விஷால்.