‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இங்கே விஜய் பற்றியும், மெர்சல் பற்றியும் சர்ச்சை சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடியோ, மலையாள சேனல்களில் விஜய்யுடன் நடித்த இனிய அனுபவங்களை பெருமையுடன் கூறி வருகிறார்.
வெளிநாட்டில் மேஜிக் மேடையில் வைத்து ஒரு டாக்டரை கொல்வாரே விஜய், அவர் தான் இந்த ஹரீஷ் பெராடி. மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகரான இவர், தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' விஜய் சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை', விக்ரம் வேதா', ஸ்பைடரில் உயர் அதிகாரி என முக்கியமான படங்களில் நடித்திருந்தார். இப்போது வெளியாகியுள்ள மெர்சல் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் இன்னும் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தபோது ஹரீஷ் பெராடியும் அதில் கலந்து கொண்டார். அங்கே ஷூட்டிங் முடிந்தவுடன் இரவு நேரத்தில் நகர வீதிகளில் வாக்கிங் போவது விஜய்யின் வழக்கமாம். அப்படி கிளம்பும்போது ஹரீஷ் பெராடி உள்ளிட்ட ஒருசிலரை பேச்சுத் துணைக்கு அழைத்து செல்வாராம் விஜய்.
“அவருடன் பேசிக்கொண்டே நடந்து செல்வது ஒரு நண்பனுடன் நடந்து செல்வது போன்ற இனிய அனுபவம்.. அவருடன் நடக்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாருடன் நடந்து செல்கிறோம் என்கிற பிரமிப்பு எனக்கு இருக்கும். ஆனால் அவர் எப்போதுபோல சாதாரண மனிதராகவே நடந்துகொள்வார்” என்கிறார் ஹரீஷ் பெராடி.
“படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் அவரது வீட்டினர் பற்றி பகிர்ந்துகொள்வார்.. தான் பார்த்த மலையாள சினிமாக்கள், மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவம் என பல விஷயங்கள் பேசுவார்.. மலையாள திரையுலகம் பற்றி சிலாகித்து பேசும் அவர், மிகச்சிறந்த படங்களை உருவாக்கும் ஒரு திரையுலகம் என்கிற மதிப்பையும் எங்கள் மீது வைத்துள்ளார்” என விஜய் பற்றி சிலாகிக்கும் ஹரீஷ் பெராடிக்கு தமிழ்ப்படங்களில் நடிப்பதில் எந்தவிதமான மொழிச்சிக்கலும் இல்லையாம்.. இன்னும் ஆச்சர்யமாக தமிழில் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங்கும் பேசிவிடுகிறாராம்.