‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'பிரேமம்' என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தான் தனது அடுத்த படம் குறித்தே வாய் திறந்தார்.
அப்போது தனது அடுத்த படம் தமிழில் தான் என்று சொன்னவர் அந்தப்படம் அவரது முதல் படமான 'நேரம்' படம் மாதிரி நகைச்சுவை படமாகவோ அல்லது பிரேமம் படம் போல காதல் கதையாகவோ இருக்காது என்பதை சொன்னதோடு அது ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட் என்றும் லைட்டாக கோடிட்டு காட்டினார்.
தற்போது இந்தப்படத்தில் சித்தார்த்தும், காளிதாஸ் ஜெயராமும் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த்தும் அல்போன்ஸ் புத்ரனும் பல வருடங்களாக நண்பர்கள் என்பதும் கேரளாவில் நடைபெற்ற அல்போன்ஸ் புத்ரனின் திருமணத்தில் கலந்து கொண்ட ஒருசில தமிழ் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்திற்கான ப்ரீ-புரொடக்சன் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றனவாம்.
நேரம் படத்தை தமிழ் - மலையாளம் என இருமொழிகளில் எடுத்தது போல இந்தப்படத்தையும் இருமொழிப்படமாக உருவாக்க இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன். 'பிரேமம்' பட வெற்றிக்கு தன்னுடன் துணைநின்ற ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி.சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இருவரையும் இந்த புதிய படத்திலும் இணைத்துக் கொண்டுள்ளதாக ஏற்கனவே அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.