போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது அதனை கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம் வெளியில் வரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அன்று மோடியின் நடவடிக்கையை ஆதரித்த கமல், இப்போது அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பணமதிப்பு நீக்கம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்பட வேண்டும் என்று டுவிட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்றி, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன்.
ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். கொஞ்சநாள் கழித்து, பணமதிப்புநீக்கம் நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.
தற்போது 'யோசனையே கபடமானது' என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவண செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.