இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
குஜராத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நமீதா. தனது கவர்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டு வந்த நமீதா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது உடல் பெருத்து போனதால் சினிமா வாய்ப்பும் டல்லடித்தது.
தற்போது பொட்டு என்ற படத்தில் அகோரி வேடத்தில் நடித்திருக்கிறார் நமீதா. இந்நிலையில், மூத்த தெலுங்கு நடிகரான சரத்பாபுவை நமீதா திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக இணையதளங்களில் ஒரு செய்தி பரவியிருக்கிறது. இந்த செய்திக்கு இதுவரை நமீதா விளக்கமளிக்கவில்லை.
ஆனால் சரத்பாபு, இது வெறும் வதந்தி என்று மறுப்பு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதோடு, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தார் நமீதா. அவ்வளவு தான், நான் அவரை சந்தித்தே பல ஆண்டுகளாகிவிட்டது. இது வெறும் வதந்தி தான். இது எனது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.