போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 3000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்ற பெருமையுடன் வெளிவந்த விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பலமாக விமர்சிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகவும் சொன்னார்கள். 50 நாளைக் கடந்துள்ள விவேகம் 200 கோடியைத் தாண்டியது என்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சுமாராக இருந்த விவேகம் படமே 200 கோடி ரூபாயைக் கடந்தது என்றால் அட்லீ, விஜய், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வெளிவர உள்ள மெர்சல் எவ்வளவு கோடியைக் கடக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே கணக்கு போட ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் மெர்சல் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும். இதோ, ஒரு தோராய கணக்கு....
3292 தியேட்டர்களில் ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு தலா 4 காட்சிகள் என்றால் மொத்தம் 13168 காட்சிகள். ஒரு காட்சிக்கு சுமார் 300 டிக்கெட் விற்றால் கூட 39,50,400 டிக்கெட்டுகள். ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 79,00,80,000 ரூபாய். அதாவது 79 கோடி ரூபாயை மெர்சல் முதல் நாளில் வசூலிக்கும். கூட குறைய சேர்த்துக் கொண்டாலும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதல் நாளில் வசூலிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது தமிழ்த் திரையுலகத்தில் புதிய சாதனை, நடக்குமா ?....