போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் பகல் 2 மணியளவில் தொடங்கியது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், சங்கத்தின் 2016 - 17 ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட உள்ளது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்த விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதை அடுத்து தமிழ் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.