போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. விவேகம் படத்தில் நடித்த போது தனது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார் அஜித். அதனால், அஜித் நடிக்கும் அடுத்த படம் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதோடு, அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு உள்பட சில டைரக்டர்களின் பெயர்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி மீண்டும் அஜித்தை, சிறுத்தை சிவாவே இயக்குவார் என்று கூறப்படுகிறது. கதையைக்கேட்டு அஜித்தும் ஓகே பண்ணி விட்டாராம். அதனால் ஸ்கிரிப்ட் வேலைகளில் சிவா ஈடுபட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.