ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
'பிக் பாஸ்' தொடரில் இடம் பெற்றதன் மூலம், தனக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைக்கும் என, கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார், ஓவியா.
தமிழில், களவாணிக்கு பின், அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. மலையாளத்திலும், வரவேற்பில்லை. வாய்ப்பின்றி தவித்து வந்த ஓவியாவுக்கு, பிக் பாஸ், சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இப்போது, ஓவியாவின் கையில், நான்கு படங்கள் உள்ளன. இதில், மூன்று படங்கள், தமிழ்; தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த நேரம் பார்த்து, சில ஆண்டுகளுக்கு முன், மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் இப்போது, தமிழில், 'டப்' செய்யப்படுகின்றன.