இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஆறுச்சாமியின் அதிகாரபூர்வ முதல் தகவல் அறிக்கை வருமாறு:
விக்ரம் ஆறுச்சாமியாக அதே கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தில் டெபுடி கமிஷனர். இதில் சூப்பிரண்ட் ஆப் போலீஸ். த்ரிஷா அதே புவனா ஆறுச்சாமி கேரக்டரில் நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் அவர் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட ஆறுச்சாமியின் புதிய காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
முதல் சாமியில் கோட்டா சீனிவாச ராவ் திருநெல்வேலி அண்ணாச்சி பெருமாள் பிச்சையாக மிரட்டினார். இரண்டாம் பாகத்தில் அண்ணாச்சியின் மகனாக, அட்வான்ஸ்டு வில்லனாக பாபி சிம்ஹா. அவர் 3 கெட்டப்பில் மிரட்டுகிறார்.
முதல் பாகத்தில் அய்யாரெட்டு சுந்தரம் எம்.எல்.ஏவாக நடித்த தியாகு, இதில் புரமோசனாகி அமைச்சர். த்ரிஷாவின் அம்மாவாக நடித்த சுமித்ரா இதிலும் அதே கேரக்டரில் தொடர்கிறார். முதல் பாகத்தின் காமெடியன் இதில் இல்லை. அவருக்கு பதிலாக சூரி நடிக்கிறார்.
அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மொத்தம் 120 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு வட மாநிலங்கள் சுற்றி கேரளா வழியாக தமிழ் நாட்டுக்கு வந்து பழனியில் முடிகிறது. இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது.
முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த ப்ரியன் இதற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இரண்டாம் பாகத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
முதல் பாகம் 5 கோடியில் தயாரானது. இரண்டாம் பாகம் சுமார் 60 கோடியில் தயாராகிறது. முதல் பாகம் 80 கோடி வசூலித்தது. இந்தப் படம் எத்தனை கோடி வசூலிக்கும் என்பது ரசிகர்கள் கையில் இருக்கிறது.