‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவரும் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் ஆடுவார்கள். காரணம் ஒரே பாட்டில் கோடிகளில் சம்பளம் கிடைத்துவிடும். தற்போது இவர்களின் பாணியை நடிகை தமன்னாவும் பின்பற்ற தொடங்கியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர், ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ், நந்திதாராஜ், ஹம்சா நந்தினி உள்பட பலர் நடிக்கும் படம் ஜெய் லவகுசா. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார், சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நண்டமுனி கல்யாண்ராம் தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் தமன்னா. ஒரு பாட்டுக்கு ஆட முதலில் மறுத்த தமன்னா சம்பளம் கோடிகள் என்றதும் ஆட ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பாடல் காட்சிக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. 500 நடன கலைஞர்களுடன் மேற்கத்திய நடனத்துக்கு ஆடுகிறார் தமன்னா. இதற்காக தனி ஸ்பெஷலான பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார் தேவி ஸ்ரீபிரசாத். படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். அடுத்த மாதம் 21ந் தேதி படம் வெளிவருகிறது. தேவி படத்தில் தமன்னான போட்ட ஆட்டம்தான் அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.