சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |
இசையமைப்பாளர்கள் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும், "நான்" பட ஹீரோவுமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். "காதலில் விழுந்தேன்", "வேட்டைக்காரன்" உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் விஜய் ஆண்டனி. இவர் இப்போது "நான்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜீவா சங்கர் என்பவர் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியும் வருகிறார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், "நான்" படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், எனது நண்பர் ஜீவா சங்கர் தான் இப்படத்தின் டைரக்டர். வித்தியாசமான கதை. எனக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதன்படி இந்தபடத்தில் ஹீரோவாக நடித்தேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் நம்மூர் இசை மேதைகள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். நான் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் அவ்வளவு தான். "நான்" படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் இந்தபடம் நிச்சயம் பிடிக்கும், அப்படியே என்னையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.