ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி படங்களில் நடித்த தன்ஷிகா வாலுஜடா என்ற கன்னடப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் கன்னடப் படம் இது. இந்தப் படத்தை தமிழிலும் தயாரிக்கிறார்கள். அதற்கு குழலி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ரமணாவ் மல்லம் என்பவர் இயக்குகிறார். மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோ. அவர் நடிக்கும் முதல் கன்னடப் படமும் இதுதான். ராதன் இசை அமைக்கிறார், சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சிம்ஹவானி சலன சித்ரா மற்றும் சாய் வைஷ்ணவி ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
வாலுஜடா என்றால் கன்னடத்தில் வால்போல் நீண்ட ஜடை என்று பொருள். குழலி என்றால் தமில் நீண்ட கூந்தலை உடையவள் என்று பொருள். படத்தின் ஹீரோயினுக்கு இயற்கையாகவே நீண்ட கூந்தல் அமைந்திருக்கிறது. ஆனால் நீண்ட கூந்தல் உள்ள பெண் குடும்பத்துக்கு ஆகாது என்ற கருத்து உள்ளதால் அவளுக்கு திருமணம் நடப்பது தடை படுகிறது. எந்த நீண்ட ஜடை அவள் வாழ்க்கைக்கு வில்லனாக அமைந்ததோ. அதே ஜடையை வைத்து அவள் முன்னேறிக் காட்டுவதுதான் கதை என்கிறார்கள். முழு நீள காமெடி படமாக உருவாகி வருகிறது.