ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் சங்கம் மஞ்சு வாரியர் மீது மறைமுக தடை விதித்துள்ளதாக நேற்று முதல் சோஷியல் மீடியாவில் ஷாக்கிங்கான செய்தி ஒன்று பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மோகன்லால் அடுத்ததாக நடிக்கவுள்ள 'ஒடியன்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மஞ்சு வாரியர் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒடியன் படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், மஞ்சு வாரியரின் நண்பர் தான் என்றாலும், இந்தப்படத்தில் இருந்து மஞ்சுவை விலக்கியதே அவர் தான் என்றும் சொல்லப்படுகிறது..
திலீப்புடனான விவாகரத்தை தொடர்ந்து மஞ்சு வாரியாருக்கு மற்ற நடிகர்கள் யாரும் ஆதரவு தர முன் வராத நிலையில் மோகன்லால் மட்டும் அவருக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருந்தார். தான் நடித்த 'என்னும் எப்பொழும்', அடுத்து வெளியாகவுள்ள 'வில்லன்' ஆகிய படங்களில் மஞ்சு வாரியருக்கு வாய்ப்பு தந்தார். அந்தவகையில் தான் அடுத்ததாக 'ஒடியன்' படத்திலும் மஞ்சு வாரியர் இடம் பிடித்தார். மஞ்சு வாரியரை வைத்து சில விளம்பர படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் தான் படத்தின் இயக்குனர் என்பதால் மஞ்சுவுக்கு இந்த வாய்ப்பு எளிதாக கிடைத்தது.
ஆனால் சமீபத்தில் நடிகை விவகாரத்தில் சிக்கிய நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், அது அங்குள்ள சீனியர்களால் மனப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், இன்னும் திலீப் மீதான பாசம் அவர்களுக்கு, குறிப்பாக மம்முட்டி, இன்னொசன்ட் உள்ளிட்ட சிலருக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் கொடுத்த பிரஷர் காரணமாகவே மோகன்லால், 'ஓடியன்' இயக்குனரிடம் மஞ்சுவை நீக்கிவிடும்படி சொன்னதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
மேலும் நடிகை விவகாரத்திற்குப்பின் சில நடிகைகளுடன் சேர்ந்துகொண்டு மஞ்சு வாரியர் பெண்கள் அமைப்பை துவங்கியதையும் 'அம்மா' அவ்வளவாக ரசிக்கவில்லை.. மோகன்லால் படத்தில் இருந்தே மஞ்சு நீக்கப்பட்டது உறுதியானால், இனி மற்ற படங்களில் மஞ்சுவை ஒப்பந்தம் செய்வதும் குறைந்துபோகும் என்றும், இது மஞ்சு வாரியார் மீது விதிக்கப்படும் மறைமுக தடையாக இருக்கும் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.