‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத் திரையுலகில் இருக்கும் தற்போதைய நடிகர்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிகர் பகத் பாசில். தமிழிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகன். மலையாளத்தில் பல தரமான படங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் தமிழில் அறிமுகமாகும் படம் 'வேலைக்காரன்'.
நேற்று முன்தினம் பகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார்கள். ஆனால், போஸ்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மோகன்ராஜாவின் 'வேலைக்காரன்' என்றே போஸ்டர்களை வெளியிட்டு பகத் பாசிலின் ரசிகர்களையும், திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள்.
'வேலைக்காரன்' படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தான், ஆனால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பெயரையும் போஸ்டரில் குறிப்பிட்டிருக்கலாமே. அதுவும் அவருடைய பிறந்த நாளில், அவருக்காக வெளியிடப்படும் போஸ்டரில் கூட அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது அவரை அவமதிக்கும் செயல் என பலரும் சமூக வலைத்தளங்களில் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
அதனால்தானோ என்னவோ 'வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, பகத் பாசில் நடித்துக் கொண்டிருக்கும் படிப்பிடிப்புத் தளத்திற்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட கேக்கிலும் பகத் பெயர் இல்லாத 'வேலைக்காரன்' போஸ்டருடன் தான் இருந்தது அதைவிட ஆச்சரியம்.
ஏறக்குயை 15 ஆண்டுகளாக 50 படங்கள் வரை நடித்துள்ள பகத் பாசிலின் பெயரை இனி மேலாவது 'வேலைக்காரன்' போஸ்டர்களில் பகத் பெயரை தவறாமல் இடம் பெறச் செய்வார்களா ?.