ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
'பாகுபலி 2' - 100 வருடத் திரையுலக வரலாற்றில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது. வியாபாரம், வெற்றி, வசூல், டப்பிங் ஆகி மற்ற மொழிகளில் வசூல், வெளிநாடுகளில் வசூல், ஓடிய நாட்கள் என பல விதங்களில் இந்தப் படம் தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100 நாட்களைத் தொட்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக ஒரு படம் 100 நாட்களைக் கடப்பது என்பது சிரமமான விஷயமாக இருந்த சூழ்நிலையில் இப்படம் பல தியேட்டர்களில் 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1800 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் சீனாவில் வெளியாக உள்ளது. அங்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் மொத்த வசூல் 2000 கோடியைத் தாண்ட முடியும்.
இந்திய சினிமா ஒன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டால் அது வியாபார எல்லை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மொத்த திரையுலகத்திற்கும் உணர்த்திய படம் 'பாகுபலி 2'. அந்த எல்லையைத் தொட இனி பலரும் முயற்சிப்பார்கள். இருந்தாலும் 'பாகுபலி 2' போல வெற்றியும், சாதனையும் மற்றுமொரு படம் நிகழ்த்துமா என்பதற்கு நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.