‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் ஆக்ஷ்ன் கிங் வலம் வருபவர் அர்ஜூன். தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார். அதுவும் ஹீரோவாகவே நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் சில படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் பட்டத்து யானை படத்தில் அறிமுகமான தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தற்போது சொல்லிவிடவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதுபற்றி அர்ஜூன் கூறுகையில், இந்த சொல்லிவிடவா படத்தை ஒரு புதிய கோணத்தில் இயக்கியிருக்கிறேன். முழுக்க முழுக்க காதல் கதை. இன்றைய ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். நானும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறேன். இந்த படத்தைத் தொடர்ந்து பிரபல ஹீரோக்களை வைத்து படம் இயக்கவும் ஆசைப்படுகிறேன். அதற்கான சந்தர்ப்பங்கள் தான் அமைய வேண்டும். அதேசமயம் தொடர்ந்து நடிப்பேன். நிபுணன் படத்தில் நடித்தது போன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் அர்ஜூன்.