ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை, டிவீட், ரிடிவீட், லைக் ஆகியவற்றுக்குத்தான் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். தற்போது புதிதாக 'ஹிந்தி' டப்பிங் சாதனைகளுக்கௌல்லாம் சண்டையிட்டுக் கொண்டு அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைக்கிறார்கள். இந்த காரசார மோதல் இன்னும் எதில் எல்லாம் போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
'விவேகம்' டீசரை மே 11ம் தேதியன்று வெளியிட்டார்கள். சுமார் 80 நாட்களில் யு டியூபில் 1 கோடியே 82 லட்சம் பார்வைகள் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளன. ஆனால், 'தெறி' ஹிந்தி டப்பிங் படத்தை யு டியுபில் கடந்த ஜுலை 1ம் தேதி வெளியிட்டார்கள். ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த வீடியோவை 2 கோடியே 17 லட்சம் பார்வை கிடைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தின் ஹிந்தி டப்பிங் வீடியோவிற்கும் குறுகிய காலத்தில் இவ்வளவு பார்வைகள் கிடைத்தது இல்லை. அந்த சாதனையை 'தெறி' ஹிந்திப் பட வீடியோ புரிந்திருக்கிறது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான 'வேதாளம்' ஹிந்திப் பட வீடியோவிற்கு இதுவரை 1 கோடியே 37 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஆனாலும், தென்னிந்திய படங்களைப் பொறுத்தவரையில் அல்லு அர்ஜுன் நடித்த 'சரைனொடு' ஹிந்தி டப்பிங் படம் 5 கோடியே 86 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனைக்குப் பின், அஜித், விஜய் படங்கள் ஒன்றுமில்லை.