‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதுகிறார் சமுத்திரக்கனி. 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்ற மலையாளப்படம் - மகேஷின்டெ பிரதிகாரம்.
இந்தப் படத்தின் தமிழ்ரீ-மேக்கில் உதயநிதி ஸ்டலின் ஹீரோவாக நடிக்கிறார். பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மலையாள நடைகை நமீதா பிரமோத் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி முதல் குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.
குற்றாலம் பகுதியில் ஏற்கனவே பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதயநிதி நடிக்கும் படத்தின் குழுவினரும் குற்றாலத்தில் முகாமிட உள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்துக்கு லொகேஷன் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே குற்றாலம் பகுதியை தேர்வு செய்தார் பொன்ராம். தற்போது அதே லொகேஷனுக்கு உதயநிதி படக்குழுவினரும் சென்றுள்ளனர்.