போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிவா இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த படம் சிறுத்தை. இந்த படத்தில் ஒரு போலீஸ் வேடத்திலும் நடித்திருந்தார் கார்த்தி. அந்த கேரக்டரில் அவர் துடிப்புடன் நடித்திருந்ததால் அது அவரை பேச வைத்தது. அதையடுத்து தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் போலீசாக நடித்திருக்கிறார் கார்த்தி.
இந்த படத்திற்காக கடின உடற்பயிற்சி மூலம் தனது உடல்கட்டை மாற்றிய கார்த்திக், ஹேர்ஸ்டைலையும் மாற்றி காவல்துறை அதிகாரியாக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராகுல்பிரீத்சிங் நடித்திருக்கிறார். இப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்பு களும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது.
மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழில் வெளியான நிலையில், நேற்று தெலுங்கிலும் காக்கி என்ற டைட்டீலுடன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்த தோழா படம் ஊபிரி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி கார்த்திக்கிற்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுத்தது. அதனால் இந்த படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒரே நாளில் அதிகப்படியான தியேட்டர்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.