ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
யூ டேர்ன் என்ற கன்னடப் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஷரத்தா ஸ்ரீநாத். மலையாளத்தில் கோஹினூர் என்ற படத்தில் நடித்தார், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள இவன் தந்திரன் படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. இதுதான் நான் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் என்கிறார் ஷ்ரத்தா. அவர் மேலும் கூறியதாவது:
யூ டேர்ன் திரைப்படம் வெளியான நேரத்தில் துணை இயக்குநர் ரஜத், இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பெங்களூரில் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அதன்பின் சென்னையில் ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொண்டு 2 கடினமான காட்சிகளில் நடித்து காண்பித்து தேர்வு பெற்றேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ டேர்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
இவன் தந்திரனில் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். இவன் தந்திரன் தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு நீளமான வசனம், உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எல்லாம் இந்த படத்தில் சவாலான ஒன்றாக இருந்தது. இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.