‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கைந்து படங்களாவது வெளியாகி வருகின்றன. ஜூலை 7-ஆம் தேதியும் இதற்கு விதிவிலக்கில்லை. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'. வரலட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை ஜூலை 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அர்ஜுன், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள கிரைம் திரில்லர் படமான 'நிபுணன்' படமும் ஜூலை 7-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் அமிர்த்ராஜ் இயக்கத்தில் அஸ்வின், ஸ்வாதி இணைந்து நடித்துள்ள 'திரி' படமும் ஜூலை 7-ஆம் தேதி களத்தில் குதிக்கவிருக்கிறது.
இந்த படங்களுடன் போனிகபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள 'மாம்' ஹிந்திப்படத்தின் தமிழ் டப்பிங் படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த நான்கு படங்களின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தப்பட்டியலில் மேலும் ஒரு சில படங்கள் சேர வாய்ப்புள்ளது.